//
archives

Poetry ( கவிதைகள் )

This category contains 8 posts

மாண்டாலும் மரிக்காத மர்மம்

உருக்குலைந்த உலகமிது பாசங்கள் பசாங்காகிய நிலமிது விலை வாங்கிய பூமியும் இது நிலை இல்லா ஜடங்கள் காண உருளும் உலகம் உயிர் பெறும் அந்த ஒரே இணைப்பு, அன்பு கொண்ட தாயின் அரவணைப்பு நானே வருவேன் கருவறை கொண்டு கல்லறை வைத்த பாசம் இறந்தாலும் உனைச்சுற்றும் நிழலாக உன்னை தொடரும் உணர்வாக உனை நெருங்கும் காற்றாக உனை அணைக்கும் இறந்தாலும் உயிர்பெறும் உறவு இது மாண்டாலும் மரிக்காத மர்மம் இது

ஒரு தமிழனின் தமிழ்

கவிதையின் முகவரி தெரியாது கிறுக்கல்கள்களே  கவிதையாகின்றன வார்த்தைகள் அலைமோதியது என் பேனா மையும் சிதறியது என் தமிழ் கோலமிடுகையில் வெள்ளைக்காகிதமும் வண்ணமாகியது அழகாய் தமிழ் பேசுகையில் புலவனானேன் எழுத்தில் இட கவிஞனானேன் உணர்ந்தேன் இன்று தூய தமிழும் ஒரு கவிதை என்று.

Just An ImAginAtion

மனமே வசப்படு பதிவுக்காக…. விட்டெறிந்த காதல் மீண்டும் மனதை  தொட்டகளும் பொது  கண்களும் கண்ணீரை கருத்தரிக்கும் 

கண்களும் காணட்டும் !

கானல் நீராய் மாறிய வாழ்க்கை காலத்தீயாய் தொடர்கிறதே… உயிர் பூக்கும் நாள் காண சிறு துளி நீராய் என் கண்ணில் கண்ணீர்… வெட்டையில் நின்றேன் வாட்டியது சூரிய ஒளி கொட்டும் மழை கூட என் தலை கொட்டி எச்சரிக்கிறதே…. என் வரிகள்

பட்டினி

சர சர வானம் கொட்டித்தீர்க்க இடம் தேடி ஒதுங்கும் பறவைகள் கண்டேன்… தேடி ஒதுங்கும் குணம் எங்கே என நான் தேடி பார்த்துக்கொண்டேன்…!!! வாய் இருந்தும் பேசுவதில்லை கண்களிருந்தும் கனவுகள் இல்லை ஆணையிடுகிறான் செய்கிறேன் முதலாளி முகம் பார்த்து அல்ல குடும்பத்தின் சுமை பார்த்து…!!! என் வரிகள் 

மழை

வானம் கொண்ட மேகம் படை சூழவும் பனித்துளி வெளியில் வாரி இறைக்கவும் வீசும் ஒளியும் ஓடி ஒழிந்து கொள்ள பட்சிகள் இடம் தேடி ஒதுங்குகையில் பகலும் இரவு போல் ஆனதே…. என் வரிகள்

கவிதை

வரிகளும் வரிசையில் நின்று கவிதையாகின்றனவே… குவளை கொண்டு குடைந்தெடுக்க குவளையும் பத்தாது இதயம் கொண்டு அணைத்தெடுக்க அதில் ஒன்றை பகிர்கிறேன் என் வரிகள்

தாய்

உயிருக்குள் உயிரொன்று உலகை காண துடிக்கிறது வலியும் இதமாகிறது சுமைகளை மீறிய சுகமது உன் முகம் பார்க்கும் கணம் மறைகிறது. என் வரிகள்

Follow MY VISION on WordPress.com